[X] Close

'ஒளிமயமான எதிர்காலம்': சிவாஜி பாடலை எம்ஜிஆர் பாடல் என கூறிய பிரேமலதா


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 13:11 pm
  • அ+ அ-

நடிகர் ஆர்யா - சாயிஷா சைகலின் திருமணம், ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இத்திரு மணத்தில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

‘அறிந்தும் அறியாமலும்' படத் தின் மூலம் நாயகனாக அறிமுக மானவர் ஆர்யா. ‘பட்டியல்', ‘நான் கடவுள்', ‘மதராசப்பட்டினம்', ‘ராஜா ராணி', ‘வேட்டை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக உள்ளார். தமிழில் ‘வனமகன்', ‘கடைக்குட்டி சிங்கம்', ‘ஜூங்கா' ஆகிய படங்களில் நடித்த வர் சாயிஷா சைகல். ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது ஆர்யாவுக்கும் சாயிஷா சைகலுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று ட்விட்டர் பக்கத்தில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். மேலும், தங்களுடைய திருமணம் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதி களில் ஹைதராபாத்தில் நடக்க வுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 9-ம் தேதி மாலை ஆர்யா - சாயிஷாவின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியிலும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மார்ச் 14-ம் தேதி சென்னையில் ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close