[X] Close

ராதாரவியைக் கண்டிக்க வேண்டியவர்கள் கண்டிப்பார்கள்: கமல்ஹாசன்


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 17:36 pm
  • அ+ அ-

கடமை, கண்ணியம், நேர்மை என கண்டிப்புடன் பணியாற்று பவர் காவல் துறை உதவி ஆய்வாளர் கதிரேசன் (கதிர்). அதற் காக ஒவ்வொரு முறையும் தனது உயர் அதிகாரியிடம் வெறுப்பை சம்பாதிக்கிறார். குழந்தைக் கடத்த லின் மூலம் பணம் பறித்துவரு கிறது பிரபாகரன் (லகுபரன்) தலை மையிலான ஐந்து நண்பர்களைக் கொண்ட கும்பல். ஒரு குழந்தை யைக் கடத்தி அதன் மூலம் 5 கோடி ரூபாய் பணம் கைக்கு வந்த நேரத் தில் கதிரேசன் உள்ளே புகுந்து பிரபாகரனின் நண்பனைக் கொன்று குழந்தையைக் காப்பாற்றிவிடு கிறார். இந்தக் கோபத்தில் பிரபா கரன், கதிரேசன் குடும்பத்தினர் அனைவரையும் கொலைசெய்யத் துடிக்கிறார். குடும்பத்தினரைக் காப் பாற்ற கதிரேசன் முழு முயற்சி எடுக் கிறார். இதில் யார் வெற்றிபெறு கிறார் என்பதை ஆக்‌ஷன் கலந்த திரில்லராகச் சொல்கிறது சத்ரு.

காவல் துறை என்கவுன்ட்டர் காரணமாகப் பாதிக்கப்படும் மனிதர் கள் பற்றி ஏதேனும் புதிய விஷயம் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஆரம்பக் காட்சிகள் ஏற்படுத்தி னாலும் அப்படி எதுவுமே இல்லா மல் மிகவும் சாதாரணப் பழிவாங் கும் கதையாகவே உள்ளது படம். அதேபோல் படத்தின் இடையி டையே வரும் கூத்துக் காட்சிகளும் மனதை கவரவே இல்லை.

முழுக்க முழுக்க திரில்லரா கவே தர வேண்டும் என்ற முனைப் புடன் படத்தைப் பாடல், காமெடி, காதல் என்ற எதுவும் இல்லாமல் தந்திருக்கிறார் இயக்கு நர் நவீன் நஞ்சுண்டன். காவல் துறையிடமே நேரடியாக மிரட்டிப் பணம் கேட்டால் அவர்கள் அப் படியேவா தருவார்கள்? ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மலிவாகிவிட்ட இந்தக் காலத்தில் அதைக்கூட எதிர்பார்க்காத கடத்தல் கும்பலை இந்தப் படத்தில்தான் பார்க்க முடி கிறது. அதுவும் பணத்துக்கு நடுவே செல்போனையே வைத்து அனுப்புகிறார்கள்.

கடத்தல்காரர்கள் குழந்தையை கடத்த திட்டமிடும் போக்கு, பிண வறையில் சடலம் காணாமல் போவது தெரிய வரும் காட்சி, மருத் துவமனையில் நடக்கும் நிகழ்வு என முக்கிய புள்ளிகள் அனைத்தும் சுவா ரஸ்யம் குறைவாக நகர்கின்றன.

மூன்று மாதங்கள் பணியிடை நீக்கப்பட்ட ஒரு காவல் உதவி ஆய்வாளர் அடுத்தடுத்து முன் னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி காவல்துறை கண்டுகொள்வதே இல்லை. அதுதொடர்பாக நடக்கும் உயிரிழப்புகள் குறித்த தெளிவான விசாரணையும் இல்லை.

நல்ல கதையம்சம் உள்ள படங் களைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்த கதிர் இந்தப் படத்தில் சறுக்கி இருக்கிறார். காக்கிச்சட்டைப் படம் என்ற திருப்தியை அவருக்குப் படம் தந்திருக்கலாம். சிருஷ்டி டாங்கே எனும் ஒரு கதாநாயகி படத்தில் ஒரு துணைக் கதாபாத்திரம் போல் வந்து செல்கிறார். பொன்வண்ணன், நீலிராணி, சுஜா போன்ற அறிமுக மான சில முகங்கள் படத்தில் உள்ளனர் என்பதைத் தவிர அவர்கள் வேறு எதுவும் செய்யவில்லை. பிக்பாக்கெட் சிறுவனாக வரும் கதாபாத்திரம் மட்டுமே படத்தின் ஒரே சுவாரசியம்.

படத்தில் வரும் வன்முறைச் சம் பவங்கள் பல காட்சிகளில் முகம் சுளிக்க வைக்கின்றன. திரில்லர் படத்துக்கான பின்னணி இசை எனும் பெயரில் பயங்கரச் சத்தமான இசையைத் தந்திருக்கிறார்கள்.

ஆக்‌ஷன் திரில்லர் படங்களின் வரிசையில் சத்ரு வெறும் துரு.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close