[X] Close

‘ஏன் ரிஷப் பந்த்தை விமர்சிக்கிறார்கள் பாவம்?’ - ‘டி20 கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் விளையாடும்’- மைக்கேல் வான் ட்வீட்டும் மிட்செல் ஜான்சன் பதிலும்


20

  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 15:58 pm
  • அ+ அ-

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாட்ச்மேன்' மற்றும் 'தேவி 2' ஆகிய இரண்டு படங்களுமே ஏப்ரல் 12-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளனர்.

'லட்சுமி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் அடுத்ததாக 'வாட்ச்மேன்' என்னும் படத்தை இயக்கத் தொடங்கினார். ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு சரியான தேதி பார்த்து வந்தனர்.

இப்படத்தின் வெளியீடு தாமதமானதால், பிரபுதேவா, தமன்னா, நந்திதா, கோவை சரளா நடிப்பில் 'தேவி 2' படத்தை இயக்கத் தொடங்கினார். இதன் படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடித்து, வெளியீட்டுக்குத் தயார்படுத்தினார் விஜய். 

தற்போது இரண்டு படங்களுமே ஏப்ரல் 12-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளனர். இதனா, இயக்குநர் விஜய் இயக்கி முடித்துள்ள 2 படங்களுமே ஒரே தேதியில் வெளியாகும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு படம் பின்வாங்குமா அல்லது பின்வாங்கப் போவதில்லையா என்பது வரும் நாட்களில் தெரியவரும். இரண்டு படத்தின் பணிகளையும் முடித்துவிட்டு, தற்போது ஜெயலலிதா பயோபிக்கிற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார் விஜய்.

இதைப் போலவே, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'குப்பத்து ராஜா' படம் ஏப்ரல் 5-ம் தேதியும், 'வாட்ச்மேன்' படம் ஏப்ரல் 12-ம் தேதியும் வெளியாகவுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close