[X] Close

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி? - விஷால் பதில்


vishal-interview

  • kamadenu
  • Posted: 08 Mar, 2019 19:28 pm
  • அ+ அ-

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு  விஷால் பதில் அளித்துள்ளார்.

வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அயோக்யா'. ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பணிகளுக்கு இடையே சென்னை ஜுவல்லரி மற்றும் ஜெம் சங்கத்தின் சார்பில் நடைபெறும் நகைக் கண்காட்சியை விஷால் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அறிவிக்கட்டும். அதே போல், இடைத்தேர்தல் தொடர்பாகவும் பேசிக்கிட்டே இருக்கோம். இன்னும் அறிவிக்கவில்லை. முதலில் அறிவிக்கட்டும்.

கண்டிப்பாக இந்த தேர்தல் ரொம்ப முக்கியமான தேர்தலாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மட்டுமல்ல, இந்தியாவுக்கும் சேர்த்து தான்.

இவ்வாறு விஷால் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close