[X] Close

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது


11

  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 05:18 am
  • அ+ அ-

கார்த்தி நடித்துவரும் ‘கைதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

‘தேவ்’ படத்தைத் தொடர்ந்து ‘மாநகரம்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் கார்த்தி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

ஒரே இரவில் நடப்பதாக இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் படத்தின் நாயகி என யாரும் கிடையாது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டு, அதன்படி படமாக்கி வருகின்றனர். இம்மாத மத்தியில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நிறைவடையும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (மார்ச் 8) ரிலீஸாகியுள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. சிறைச்சாலைச் சுவரில் கார்த்தியின் முகம் வரையப்பட்டிருக்க, அதில் ரத்தம் கோடுகளாக வழிவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘ரெமோ’ படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதில், அவருக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ தெலுங்குப் படத்தில் நடித்த ராஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close