[X] Close

நல்லதே நடக்கும்


  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 08:11 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

சிவாஜியுடன் நடித்த ‘இருவர் உள்ளம்’ படத்தில் கலைஞரின் வசனத்தைப் பேச பயந்தேன் என்று நடிகை சரோஜாதேவி தெரிவித்தார்.

மகளிர்தினத்தையொட்டி, தனியார் சேனல் சார்பாக சாதனை சக்தி விருது பலருக்கும் வழங்கப்பட்டது. இதில் நடிகை சரோஜாதேவிக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

‘புதியபறவை’ படத்தில், கோபால்... கோபால் என்ற பெயரை உச்சரிக்கும் ஸ்டைலிலேயே கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டீர்கள். அந்த வசனத்தைப் பேசிக்காட்டுங்கள் என்று மேடையில் கேட்கப்பட்டது.

உடனே சரோஜாதேவி, அந்த வசனத்தைப் பேசினார். அரங்கம் அதிரக் கரவொலி கிளம்பியது.

அதையடுத்து சரோஜாதேவி பேசியதாவது:

சிவாஜிகணேசனுடன் ’இருவர் உள்ளம்’ படத்தில் நடித்தேன். எழுத்தாளர் லக்ஷ்மியின் கதை இது. எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார். கலைஞர்தான் வசனம் எழுதியிருந்தார்.

கலைஞரின் வசனத்தை சரியாகப் பேசவேண்டுமே என்று எனக்கு உதறலாகவே இருந்தது.

அந்தப் படத்தில் ஒரு காட்சி. சிவாஜி அவர்கள் என்னிடம், ‘என்னை ஏன் விரும்பமாட்டேங்கிறே? எனக்கு படிப்பு இல்லையா? அழகில்லையா?’ என்றெல்லாம் கேட்பார்.

அதற்கு நான், ‘நீ படிப்பில் மேதையாக இருக்கலாம். பணத்தில் குபேரனாக இருக்கலாம். அழகில் மன்மதனாக இருக்கலாம். ஆனால் இந்த மூன்றையும் காக்கின்ற கண்ணியம் உன்னிடத்தில் இல்லை’ என்று சொல்லுவேன். கலைஞரின் வசனம். அவர் பிரமாதமாக எழுதிவிட்டார். சிவாஜி சாரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

இந்த வசனத்தைப் பேசிவிட்டு, ‘எப்படி பேசினேன்? நல்லா இல்லியா?’ என்று பயந்துகொண்டே கேட்டேன். உடனே அவர், ‘பரவாயில்லியே... உன் ஸ்டைல்லயே, பிரமாதமா பேசிட்டியே...’ என்று சிவாஜி சார் சொன்னார். அப்பாடா என்று நிம்மதியானேன்.

இவ்வாறு சரோஜாதேவி பேசினார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close