[X] Close

பாரமதி மக்களவைத் தொகுதியில் சரத் பவார் மகள் சுப்ரியாவை எதிர்த்து பாஜக சார்பில் காஞ்சன் குல் போட்டி


  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 07:37 am
  • அ+ அ-

பழம்பெரும் நடிகை குசலகுமாரி மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்ட இரங்கல்செய்தியில் கூறியிருப்பதாவது:நடனக் கலைஞரும், பழம்பெரும் திரைப்பட நடிகையுமான டி.டி.குசலகுமாரி உடல்நலக் குறைவால் மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றோம். ‘பராசக்தி’, ‘கூண்டுக்கிளி’, ‘கொஞ்சும் சலங்கை’, ‘கள்வனின் காதலி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை குசலகுமாரி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகை குசலகுமாரியை இழந்து வாடும் அவரது குடும்பம் மற்றும் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா இறைவன் திருவடிநிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் டைபிஸ்ட் கோபு மறைவுக்கு முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

நாடக மற்றும் திரைப்பட நடிகரான டைப்பிஸ்ட் கோபு மறைவு செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். திருச்சி, மணக்கால் கிராமத்தைச் சேர்ந்த டைபிஸ்ட் கோபு, இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘நாணல்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவரை 600-க்கும் மேற்பட்ட நாடகங்கள், 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கலைமாமணி விருது

மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களில் நடித்த பெருமைக்குரியவர். இவர்நாடகத் துறைக்கு ஆற்றிய சேவைக்காக ‘கலைமாமணி’ விருது பெற்றார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர். அனைவருடனும் அன்பாக பழகக் கூடியவரும், திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான டைபிஸ்ட்கோபுவின் மறைவு திரையுலகுக்கு பேரிழப்பாகும்.

டைப்பிஸ்ட் கோபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close