[X] Close

ஜி.வி.பிரகாஷ் - ரைசா வில்சன் இணையும் காதலிக்க யாருமில்லை


kadhalika-yarum-illai

  • kamadenu
  • Posted: 07 Mar, 2019 13:05 pm
  • அ+ அ-

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ரைசா வில்சன் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'காதலிக்க யாருமில்லை' என்று பெயரிட்டுள்ளனர்.

'குப்பத்து ராஜா', '100% காதல்', 'வாட்ச்மேன்', 'அடங்காதே', 'ஜெயில்', 'இயக்குநர் சசி இயக்கிவரும் படம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படங்களைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கி வரும் படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

ஆரா சினிமாஸ் நடித்து வரும் இப்படத்தின் நாயகியாக ரைசா வில்சன் நடித்து வருகிறார். இப்படம் திகில் கலந்த ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் நடைபெற்று வருகிறது.

பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு 'காதலிக்க யாருமில்லை' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. டிக் டிக் டிக்’, ‘மிருதன்’,  ‘கொடி’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான எஸ்.வெங்கடேஷ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close