[X] Close

பைக்கில் துரத்திய ரசிகர்கள்; வேண்டாம் வேகமாக வராதீர்கள் - அட்வைஸ் செய்த விஜய்


  • kamadenu
  • Posted: 07 Mar, 2019 12:01 pm
  • அ+ அ-

’தளபதி 63 ’ படத்தின்ஷூட்டிங்கை முடித்து சென்ற விஜய்யின் காரை துரத்தி சென்ற ரசிகர்களுக்கு இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்லாதீர்கள் என்று விஜய் கேட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.  இந்த நிலையில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை எஸ் ஆர் எம் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யை காண கல்லூரி மாணவர்களும், அவரது ரசிகர்களும் அப்பகுதிக்கு படை எடுத்தனர்.

படப்பிடிப்புக்களுக்கிடையே அவ்வப்போது விஜய் ரசிகர்களை சந்தித்தார். ஷூட்டிங் நடைபெறும் இடத்திலிருந்து ரசிகர்களை  நோக்கி கை அசைத்தும், ஓடும் காரில் ஏறி நின்று அவர்களுக்கு கை அசைத்து அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்தார்.

இந்த நிலையில் ஷூட்டிங் முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பிய விஜய்யின் காரை ரசிகர்கள் சில இரு சக்கர வாகானத்தில் அதிவேகமாக பின் தொடர்ந்தனர்.

 ”தளபதி ஒரு தடவ கை காட்டுங்க”  ... என்று அவர்கள் குரல் எழுப்ப, அவர்களை கண்ட விஜய் உடனடியாக காரின்  ஜன்னலை திறந்து ”போதும்பா... வேகமா வராதீங்க”... என்று அவர்களை நோக்கி  கை காட்டுவார்.

இதனை ரசிகர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close