[X] Close

அஜித் பற்றிய கருத்து: ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான இஷா கோபிகர்


isha-koppikar-angers-ajith-fans

  • kamadenu
  • Posted: 06 Mar, 2019 15:40 pm
  • அ+ அ-

நடிகர் அஜித்குமார் பற்றிய கருத்தால் சமூக வலைதளத்தில் அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் பாலிவுட் நடிகை இஷா கோபிகர். 

’காதல் கவிதை’, ’நெஞ்சினிலே’, ’என் சுவாசக் காற்றே’, ’நரசிம்ஹா’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் இஷா கோபிகர். பாலிவுட்டில் எண்ணற்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடித்து வருகிறார்.

’இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இஷா நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "முன்பு எனக்கு அஜித் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறாரா எனத் தெரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த பதில் அஜித் ரசிகர்கள் பலரை கோபப்படுத்தியுள்ளது. தொடர்ந்து பலரும் இஷா கோபிகரை திட்டி, வசை பாடி, அட்வைஸ் செய்து பல ட்வீட்டுகளை பதிவேற்றிய வண்ணம் உள்ளனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மற்ற நடிகர்களின் ரசிகர்கள் அஜித்தையும், அவரது ரசிகர்களையும் கலாய்ப்பதும் இன்னொரு பக்கம் நடந்து வருகிறது. எந்த சார்பும் இல்லாத நெட்டிசன்களுக்கு வழக்கம் போல இது நல்ல பொழுதுபோக்காக அமைந்துள்ளது. 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close