[X] Close

ஒரு வார இடைவெளியில் 2 ஜி.வி.பிரகாஷ் படங்கள் வெளியீடு


gv-prakash

  • kamadenu
  • Posted: 06 Mar, 2019 12:00 pm
  • அ+ அ-

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஏப்ரல் 5-ம் தேதி 'குப்பத்து ராஜா' படமும், ஏப்ரல் 12-ம் தேதி 'வாட்ச்மேன்' படமும் வெளிவரவுள்ளது.

'சர்வம் தாளமயம்' படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமிருந்தன. ஏனென்றால் '100% காதல்', 'குப்பத்து ராஜா', 'வாட்ச்மேன்', 'ஜெயில்', '4ஜி' உள்ளிட்ட பல படங்கள் தயாரிப்பில் இருக்கிறது.

கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு, தற்போது பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்து வருகின்றன. இந்த வரிசையில் நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் நடித்துள்ள 'குப்பத்து ராஜா' திரைப்படம் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவித்தது படக்குழு. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கப்படவுள்ளது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'வாட்ச்மேன்' திரைப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால், ஒரு வார இடைவெளியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 2 படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.

தற்போது கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்துவருகிறார் ஜி.வி.பிராகஷ். இதன் ஃபர்ஸ்ட் லுக் மார்ச் 7-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close