[X] Close

பகுத்தறிவு சர்ச்சை: ஆர்ஜே பாலாஜிக்கு 'மூடர் கூடம்' நவீன் பதில்


rjbalaji-tweet

  • kamadenu
  • Posted: 03 Mar, 2019 22:17 pm
  • அ+ அ-

'எல்.கே.ஜி' வெற்றிக்கு வாழ்த்துகள் சகோ. ஆனால் வீட்டிற்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாய் இருப்பதல்ல எங்கள் தமிழகத்தின் பகுத்தறிவு என்று ஆர்ஜே பாலாஜிக்கு 'மூடர் கூடம்' இயக்குநர் நவீன் பதில் அளித்துள்ளார். இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்ஜே பாலாஜி நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் 'எல்.கே.ஜி'. பிப்.22-ம் தேதி வெளியான இப்படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் ஆர்.ஜே.பாலாஜியுடன் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களிலேயே அனைத்து தரப்புக்கும் லாபத்தை ஈட்டியுள்ளது.

இந்நிலையில் படம் இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகவும், அதற்கான ப்ரமோஷன் வீடியோவையும் ஆர்ஜே பாலாஜி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில்  ''சாமி கும்பிடு, பூஜையைப் பண்ணு. ஆனால், அதை வீட்டுக்குள்ளேயே முடிச்சுக்கோ. வெளியில் இவர்களைத்தான் கும்பிடணும்'' என்று ப்ரியா ஆனந்த் ஆர்ஜே பாலாஜிக்கு அறிவுரை கூறுவார். சுவரில் பெரியார், காந்தி, காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் படங்கள் இருக்கும். சாமி படங்களை அகற்றிவிட்டு பெரியார் போன்ற பகுத்தறிவாளர்களின் படங்களைக் கும்பிடுவது மட்டுமே பகுத்தறிவு என்ற வசனம் இடம் பெற்றுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 'மூடர் கூடம்' இயக்குநர் நவீன் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த ப்ரமோஷன் வீடியோவைக் குறிப்பிட்டு, ''#LKG வெற்றிக்கு வாழ்த்துகள் சகோ @RJ_Balaji. ஆனால் வீட்டிற்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாய் இருப்பதல்ல எங்கள் தமிழகத்தின் பகுத்தறிவு. ஆத்திகரே அதிகம் இருக்கும் இம்மன்னில் சாஸ்திரம் கூறும் மடமைகள் புகாமல் காத்து நிற்பதே எங்கள் பகுத்தறிவு. 95% பெரியாரின் ஆதரவாளர்கள் நாத்திகர்கள் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close