[X] Close

மீண்டும் தனுஷ் படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்


santhosh-narayan-in-dhanush-film

  • kamadenu
  • Posted: 02 Mar, 2019 22:49 pm
  • அ+ அ-

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'பேட்ட' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது இதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

'பேட்ட' படத்துக்கு முன்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ். அப்படத்தை இப்போது ஓய் நாட்  ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் தனுஷ் உடன் பல்வேறு ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கவுள்ளனர். இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தனுஷ் நடித்த 'வடசென்னை' படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் சந்தோஷ் நாராயணன். கார்த்திக் சுப்பாரஜ் இயக்கிய படங்களில் 'பேட்ட' படத்தைத் தவிர இதர படங்களுக்கும் இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ஆகையால் இக்கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close