[X] Close

’அயர்ன் மேன்’ கதாபாத்திரத்தில் விஜயை நடிக்க வைக்கலாம்: சமந்தா


ironman-vijay

  • kamadenu
  • Posted: 02 Mar, 2019 13:13 pm
  • அ+ அ-

’அவெஞ்சர்ஸ்’ தமிழில் எடுக்கப்பட்டால் அயர்ன்மேனாக விஜய் நடிக்கலாம் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

மார்வெல் நிறுவனத்தின் அடுத்த சூப்பர்ஹீரோ படமான ’கேப்டன் மார்வெல்’ வரும் மார்ச் 8 (மகளிர் தினம்) அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.  ப்ரீ லார்சன், சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை அன்னா போடென், ரையான் ஃப்ளெக் இயக்கியிருக்கிறார்கள். இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று (01.03.2019) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகைகள் தமன்னா , சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் டிஸ்னி நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய காஜல் அகர்வால், “நான் மார்வெல் காமிக்ஸ் மற்றும் படங்களின் மிகத் தீவிரமான ரசிகை. தோர் தான் எனக்கு மிகவும் பிடித்த மார்வெல் கதாபாத்திரம்” என்று கூறினார்.”

’அவெஞ்சர்ஸ்’ தமிழில் எடுக்கப்பட்டால் யாரை எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என தொகுப்பாளர் கேட்டதற்கு, "விஜயை அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம். அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷ் மற்றும் காமெடி சென்ஸ் விஜய்யிடம் உள்ளது” என சமந்தா கூறினார்.

தோர் கதாபாத்திரத்தில்அஜீத் நடித்தால் சரியாக இருக்கும் என்று காஜல் அகர்வால் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close