[X] Close

தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான்: நடிகர் சித்தார்த் காட்டம்


siddharth-criticizes-pakistan

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 11:50 am
  • அ+ அ-

பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என நடிகர் சித்தர்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தியது. 

இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இரு இந்திய  விமானிகளைக் கைது செய்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது. இதில் ஒருவர் விமானி காமாண்டர் அபிநந்தன். அபிநந்தனை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் கோரிக்கைகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார், "தீவிரவாதிகள் நமது வீரர்களைக் கொன்றார்கள். நாம் அவர்களின் முகாம்களை அழித்தோம் (யாரும் பலியாகவில்லை என அவர்கள் மறுத்தாலும் தீவிரவாத முகாம்கள் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை). நமது பைலைட்டை சிறைபிடித்திருக்கிறார்கள். இது ஒரே அடிப்படையில் நடைபெற்ற சம்பவமே அல்ல. பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது. இந்தியா ஆதரிக்கவில்லை. போர் இதை மாற்றாது, மாற்றவும் முடியாது. பேச்சுவார்த்தையும் தான்" என்று தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close