[X] Close

தொடர் சர்ச்சையில் '90 எம்.எல்': சமூகவலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு


90-ml-teaser

  • kamadenu
  • Posted: 26 Feb, 2019 14:26 pm
  • அ+ அ-

'90 ML' படத்தின் டீஸரைத் தொடர்ந்து, தற்போது வெளியிடப்பட்டுள்ள SNEAK PEEK வீடியோவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் '90 எம்.எல்'. பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அதிலிருந்த காட்சிகள், வசனங்கள் முழுக்க ஆபாசமாகவும், இரட்டை அர்த்த வசனம் கொண்டதாகவும் இருப்பதாக நெட்டிசன்களும், தமிழ் சினிமா ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகவுள்ளதாl, படத்தின் SNEAK PEEK ஒன்றை வெளியிட்டது படக்குழு. அதிலும் பழங்களை வைத்து ஓவியா பேசும் வசனமும், காட்சிகளும் பெண்களை ஆபாசமாக சித்தரித்துள்ளதாக கொந்தளிக்கின்றனர்.

இந்த SNEAK PEEK லிங்க்கிலேயே பலரும் கடுமையாக படக்குழுவினரைச் சாடியுள்ளனர். இக்காட்சிகளுக்கு எல்லாம் தணிக்கை குழு எப்படி அனுமதியளித்தது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ட்ரெய்லர் சர்ச்சை எழுந்த போது ஓவியா தன் ட்விட்டர் பக்கத்தில், “பழத்தைச் சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது படத்தில் இடம்பெறும் ‘பழங்கள்’ குறித்த வசனங்களால், மேலும் சர்ச்சைச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது இந்தப் படக்குழு! 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close