[X] Close

தீவிரவாத முகாமை தகர்த்த இந்திய விமானப்படை!- சபாஷ் சொன்ன ரஜினிகாந்த்


rajini-hails-airforce

ரஜினிகாந்த் | கோப்புப் படம்

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Feb, 2019 13:29 pm
  • அ+ அ-

பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது 1000 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், சபாஷ் இந்தியா எனப் பதிவிட்டு தேசியக் கொடியையும் பதிவிட்டிருக்கிறார் ரஜினிகாந்த். கைதட்டல் குறியீட்டையும் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக, இன்று (செவாய்க்கிழமை)  அதிகாலை 3 மணியளவில்  இந்தியாவின் 12 மிராஜ் ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது வீசின. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் தங்கியிருந்த பாலாகோட் தீவிரவாத முகாம் மீதான தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர்  கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்திருக்கிறார்.

இந்த தாக்குதலுக்கு விளையாட்டு, சினிமா, அரசியல் என பலதுறை பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினியும் தனது பாராட்டை பதிவு செய்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close