[X] Close

ரூ.37 லட்சம் ஏமாற்றியதாக சோனாக் ஷி சின்ஹா மீது புகார்


sonakshi-sinha

  • kamadenu
  • Posted: 25 Feb, 2019 09:50 am
  • அ+ அ-

பாஜக அதிருப்தி தலைவரும், இந்தி நடிகருமான சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக் ஷிசின்ஹா. இவர் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். இந்தியில் சல்மான் கானின் தபாங் படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் சோனாக் ஷி.

தமிழில் நடிகர் ரஜினியுடன்லிங்கா படத்தில் சோனாக் ஷி நடித்து புகழ்பெற்றார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தியா பேஷன் மற்றும் பியூட்டிவிருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ரூ.37 லட்சம் பணம் பெற்றிருந்தார். அவருக்கு 4 தவணைகளில் பணம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க சோனாக் ஷி மறுத்துவிட்டார்.

இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறும் சோனாக் ஷியிடம் கேட்டனர். ஆனால் அதற்கு சோனாக் ஷிபணத்தைத் திரும்பத் தர மறுத்ததாகத் தெரிகிறது.

இதனிடையே நேற்று உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் போலீஸ் நிலையத்தில் சோனாக் ஷிமீது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். நிகழ்ச்சி ஏற்பட்டாளர் பிரமோத் சர்மா இந்த புகாரைக் கொடுத்துள்ளார்.

அதன்படி நடிகை சோனாக் ஷி, மாளவிகா பஞ்சாபி, துமில் தக்கர், எட்கர் சகாரியா, அபிஷேக் சின்ஹாஆகிய 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close