[X] Close

புரட்சி உருவானது: சிநேகாவைப் பாராட்டிய விஷால்


vishal-praised-sneha

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 14 Feb, 2019 16:54 pm
  • அ+ அ-

சாதி, மதமில்லை எனச் சான்றிதழ் பெற்ற சிநேகாவைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஷால்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபராஜா. இவர், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிநேகா (34). இவர், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார்.

சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற சிநேகா, சாதி, மதம் அற்றவர் என திருப்பத்தூர் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழைப் பெற்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவிலேயே சாதி, மதம் குறிப்பிடாமல் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சிநேகா அடைந்துள்ளார். 

இந்தத் தகவலை அறிந்த பல்வேறு தரப்பினர், அவரைத் தொலைபேசி மூலமாகவும், நேரில் சந்தித்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான விஷால், ட்விட்டரில் சிநேகாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“மதம் அல்ல, மனம்தான் முக்கியம். சொல்லி அடிச்ச எம்.ஏ.சிநேகா. உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். புரட்சி உருவானது. இந்தியாவிலேயே முதன்முறையாக நிஜ வாழ்க்கையில் இதைப் பார்ப்பது பெருமிதமாக இருக்கிறது. வார்த்தைகள் இல்லை.

மிகப்பெரிய உதாரணத்தை சிநேகா செட் செய்துவிட்டார். மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், தாசில்தார் ஆகியோருக்கு நன்றி” என ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close