[X] Close

'தளபதி 63' அப்டேட்: 1000 குழந்தைகளுடன் விஜய் நடனம்


vijay-dance-with-1000-childrens

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 13 Feb, 2019 19:00 pm
  • அ+ அ-

'தளபதி 63' படத்தின் ஓப்பனிங் பாடலுக்காக 1000 குழந்தைகளுடன் விஜய் நடனமாடியுள்ளார்.

'சர்கார்' படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

'தளபதி 63' என்று தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், நயன்தாரா, யோகி பாபு, விவேக், கதிர் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகின்றனர். சென்னையில் தொடங்கிய முதற்கட்டப் படப்பிடிப்பில், விஜய்யின் அறிமுகக் காட்சி மற்றும் பாடல் படமாக்கப்பட்டது.

இதில், ஓப்பனிங் பாடலில் விஜய்யுடன் சுமார் 1000 குழந்தைகளை ஆடவைத்து மிகப் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் அட்லீ. முன்பாக, 'தெறி' மற்றும் 'மெர்சல்' படங்களில் விஜய்யுடன் குழந்தைகளை ஆடவைத்து காட்சிப்படுத்தியுள்ளார் அட்லீ. 'தளபதி 63' படத்தில் ஒருபடி மேலேசென்று, 1000 குழந்தைகளை ஆடவைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்ட டேக்குகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் 603, 604 என வரிசையாக எண்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய், யோகி பாபு சம்பந்தப்பட்டக் காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு, கலை இயக்குநராக முத்துராஜ் பணிபுரிந்து வருகிறார். இந்த வருடம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது ‘தளபதி 63’.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close