[X] Close

200 மில்லியன் பார்வைகள்: இமாலய சாதனையை நிகழ்த்தியது 'ரவுடி பேபி' பாடல்


maari-2

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 12:25 pm
  • அ+ அ-

'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல் யூ-டியூப் தளத்தில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாரி 2'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இப்படத்தில் 'ரவுடி பேபி' என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்பாடலின் வீடியோவை யூ-டியூப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டது படக்குழு. பெரும் வைரலாக பரவி, பில்போர்ட் இசைப் பட்டியலிலும் இடம்பெற்று சாதனை புரிந்தது.

தமிழ் சினிமாவில் அதிக பார்வையாளர்கள் கொண்ட பாடலாக 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் இருந்து வந்தது. அதனையும் கடந்து 'ரவுடி பேபி' பாடல் சாதனை புரிந்தது. தமிழ்த் திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூ-டியூப் வீடியோ என்ற புதிய சாதனையை நிகழ்த்தியது.

தென்னிந்திய திரையுலகில் 'ஃபிடா' படத்தின் 'வச்சிந்தே' வீடியோ பாடல் 183 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு முதலிடத்தில் இருந்தது. தற்போது அதையும் கடந்து இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளது 'ரவுடி பேபி' பாடல் வீடியோ. மேலும், 200 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது.

இதன் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் 200 மில்லியன் பார்வைகளைக் கொண்ட யூ-டியூப் வீடியோ என்ற பெயரையும் பெற்றுள்ளது 'ரவுடி பேபி' பாடல் வீடியோ. இந்த சாதனை தொடர்பாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் "ரவுடி பேபி, 20 கோடி பார்வைகள். பிரபுதேவா சார், ஜானி மாஸ்டர், யுவன் சங்கர் ராஜா சார், இயக்குநர் பாலாஜி மற்றும் அவரது குழு, காந்தக் குரல் உடைய தீ, சாய் பல்லவி அனைவருக்கும் நன்றி.

சாய் பல்லவி நீங்கள் நடித்த வச்சிந்தே பாடலின் சாதனையை நீங்களே முறியடித்துவிட்டீர்கள், வாழ்த்துக்கள். ரவுடி பேபியை அதிகம் விரும்பிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி." என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close