[X] Close

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ ஷூட்டிங் நிறைவு


maamanithan-shooting-wrapped

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 12 Feb, 2019 14:51 pm
  • அ+ அ-

விஜய் சேதுபதி நடித்துவந்த ‘மாமனிதன்’ படத்தின் ஷூட்டிங், நேற்றுடன் (பிப்ரவரி 11) நிறைவு பெற்றுள்ளது.

சீனு ராமசாமி இயக்கிய ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் நடித்தார். இதில், ‘இடம் பொருள் ஏவல்’ இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில், நான்காவது முறையாக ‘மாமனிதன்’ படத்தில் இணைந்துள்ளது விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி. இந்தப் படத்தை, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். ‘பியார் பிரேமா காதல்’ படத்தைத் தொடர்ந்து யுவன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. 

இந்தப் படத்தில் ஹீரோயினாக காயத்ரி நடிக்கிறார். ‘இமைக்கா நொடிகள்’ படத்தைத் தொடர்ந்து, இதிலும் விஜய் சேதுபதியின் மகளாக நடிக்கிறார் மானஸ்வி. இவர், நடிகர் கொட்டாச்சியின் மகள். இதில், ஆட்டோ டிரைவராக நடிக்கிறார் விஜய் சேதுபதி.

தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு, நேற்றுடன் (பிப்ரவரி 11) முடிவடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தர்மதுரை’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் சுகுமார்.

இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close