[X] Close

பெரிய நாயகனாக வளருங்கள்: ஆர்.ஜே.பாலாஜிக்கு கபில்தேவ் பாராட்டு


kapil-dev

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 12:53 pm
  • அ+ அ-

பெரிய நாயகனாக வளருங்கள் ஆர்.ஜே.பாலாஜி என்று 'எல்.கே.ஜி' படத்துக்கான வாழ்த்துச் செய்தியில் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக அறிமுகமாகவுள்ள படம் ‘எல்.கே.ஜி.’. பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார். ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் தொடக்கமே 'அரசியலுக்கு வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி' என்று தான் விளம்பரப்படுத்தவே தொடங்கினார். மேலும், படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் என அனைத்துமே சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை கிண்டல் செய்யும் தொனியில் இருந்ததால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'எல்.கே.ஜி' படத்தை விளம்பரப்படுத்த ட்விட்டர் அலுவலகம் தொடங்கி, தனது கிரிக்கெட் வர்ணனையில் உடனிருந்தவர்கள் மூலமாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. தற்போது இப்படத்துக்கு வீடியோ வடிவில் தனது வாழ்த்துகளை அனுப்பியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கபில்தேவ். வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

வணக்கம், நான் கபில் தேவ். ஆர்ஜே பாலாஜிக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் விளையாடுவது மிக எளிது, ஆனால் திரைப்படங்களில் வேலை செய்வது மிகக் கடினம். இதை ஒரு கிரிக்கெட் வீரனாக நான் சில சமயங்களில் நினைப்பதுண்டு. (அப்படியான திரைத்துறையில் இருக்கும்) உங்களுக்கு என் வாழ்த்துகள். பெரிய நாயகனாக வளருங்கள். உங்கள் திரைப்படம் எல்.கே.ஜி வெற்றிபெற என் வாழ்த்துகள்.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி எடிட் செய்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close