[X] Close

உடல் எடையைக் குறைத்த அனுஷ்கா: சமூகவலைத்தளத்தில் குவியும் பாராட்டு


anushka-weight-loss

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 12:40 pm
  • அ+ அ-

மீண்டும் உடல் எடையைக் குறைத்து பழைய நிலைமைக்கு திரும்பியுள்ள அனுஷ்காவுக்கு சமூகவலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பாகமதி’. 2018-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இப்படம் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

'பாகமதி' படத்துக்குப் பிறகு அனுஷ்கா வேறெந்த படத்திலும் நடிக்கவில்லை. காரணம், அவருடைய உடல் எடை. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக ஏற்றிய எடை, குறையவே இல்லை. யோகா, டயட் உள்ளிட்ட பலவகையில் முயற்சி செய்த போதும் அனுஷ்காவின் எடை குறையவே இல்லை.

மேலும், பல காலமாக அனுஷ்கா எந்தவொரு புது நிகழ்ச்சியிலும், படத்திலும் நடிக்காமலே இருந்தார். தற்போது அதற்கான காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளது. உலகளவில் பிரபலமான வாழ்க்கைமுறை பயிற்சியாளர் மற்றும் நிபுணர் லூக் கொடினோ மூலமாக தன் உடல் எடையைக் குறைத்து மீண்டும், பழைய அழகுக்கு திரும்பியுள்ளார் அனுஷ்கா.

அவருடைய புதிய போட்டோஷுட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. பலரும் அவரது உடல் எடை குறைப்புக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவரது உடல் எடை குறைப்பு குறித்து லூக் கொடினோ "அற்புதமான, அழகான, எளிமையான, பணிவான, இனிமையான அனுஷ்கா ஷெட்டி. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை புதிய மதமாக்கி, தேசத்தின் ஆரோக்கியத்தை மாற்றுவதற்கு எங்களிடம் திட்டமும், நோக்கமும் உள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவும், ஆசிர்வாதமும், அன்பும் எங்களுக்குத் தேவை. கிடைக்குமா?" என்று தெரிவித்துள்ளார்.

உடல் எடை குறைப்புக்குப் பிறகு மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட நடிகர்களுடன் ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கும் 'சைலன்ஸ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனுஷ்கா. இது வசனமே இல்லாத படம் என்பதால், அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close