[X] Close

’அதுக்கு இவன் சரிப்படமாட்டான்’ காமெடி;  40 நிமிஷத்துல முடிச்சுக் கொடுத்த வடிவேலு!


vadivelu-manobala

வடிவேலு - மனோபாலா

  • வி.ராம்ஜி
  • Posted: 09 Feb, 2019 19:19 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

’அதுக்கு இவன் சரிப்படமாட்டான்’ காமெடியை வெறும் 40 நிமிஷத்துல முடிச்சுக் கொடுத்தார் வடிவேலு என்று மனோபாலா நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

நடிகரும் இயக்குநருமான மனோபாலா தனியார் சேனலுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

படத்துக்கான ஷூட்டிங் ஸ்பாட். வடிவேலு உட்பட எல்லோரும் வந்துவிட்டோம். அப்போது அந்த சீன் பேப்பர் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. அதைப் பார்த்துவிட்டு வடிவேலு, ‘இது சரியில்ல. நமக்கு சரிப்பட்டு வராது. காமெடியே இல்லியே’ என்று சொல்லிவிட்டார்.

அப்போது, நான் வடிவேலுகிட்ட சொன்னேன்.  ‘வடிவேலு. இதையே காமெடியா பண்ணிருவோமா’ன்னு கேட்டேன். அதாவது, ‘அதுக்கு இவன் சரிப்படமாட்டான்’ங்கற வார்த்தையையே திருப்பித் திருப்பிச் சொல்லி அதையே காமெடியா டெவலப் பண்ணிருவோம். நான் இருக்கேன். சிங்கமுத்து இருக்காரு. போண்டா மணி இருக்கான். எல்லாரும் சேர்ந்து ரிப்பீட் பண்ணிக்கிட்டே இருப்போமா. நல்லா வரும்னு சொன்னேன்.

உடனே வடிவேலு அதுக்கு டைமிங் கொடுத்து ரைமிங்கா சொல்லி கலக்கியெடுத்தாரு. ‘எதுக்குடா சரிப்பட்டு வரமாட்டேன்’ன்னு சொல்லுங்கடான்னு அவர் சொல்ற மாடுலேஷனே பத்திக்கிச்சு.

இந்த மொத்தக் காட்சியையும் நாப்பதே நிமிஷத்துல முடிச்சுக் கொடுத்தாரு வடிவேலு. அவரை மாதிரி கலைஞனைப் பாக்கவே முடியாது. மகா கலைஞன் வடிவேலு.

இவ்வாறு மனோபாலா தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close