[X] Close

விஜய்சேதுபதிக்கு கதை ரெடி; சேரன் உற்சாகம்


cheran

சேரன் - விஜய் சேதுபதி

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 13:31 pm
  • அ+ அ-

ம.மோகன்

விஜய்சேதுபதிக்கு கதை ரெடியாகிவிட்டது என்று இயக்குநர் சேரன் உற்சாகத்துடன் பதில் அளித்தார்.

இயக்குநர் சேரன் பிரத்யேகப் பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

நீங்கள் நாயகனாக நடித்திருக்கும் ‘ராஜாவுக்குசெக்’ படத்தில் நீங்கள்தான் ராஜாவா அல்லது ராஜாவுக்கு நீங்கள் செக் வைக்கிறீர்களா?

அந்த சஸ்பென்ஸை இப்போ சொல்ல முடியாது. அது எமோஷனல் திரில்லர் படம். என்னோட கதாபாத்திரம் ரொம்பவே அழுத்தமாக இருக்கும். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை உருவாக்கும் இயற்கையாக அமைந்த திருப்பங்கள் கொண்ட படம். நான் ரசித்து நடித்த கதை.

 விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை எப்போதுதொடங்கப் போகிறீர்கள்?

இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம்னு உறுதியானதும், ‘கதையைத் தயார்செய்யுங்க’ன்னு விஜய்சேதுபதி சொன்னார். கதை தயார்.

இதற்கிடையில அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்கள் வரிசையாகப் படப்பிடிப்புகள் நடக்குது.

 நாங்கள் திட்டமிட்டிருப்பது பெரிய படம். ‘தயாரிப்பாளரை நானே தருகிறேன்’ என்று சேது கூறியிருக்கிறார். இந்தப் படம் வெளியானதும் இதே தயாரிப்பாளருக்கு இன்னொரு படம் இயக்கப்போகிறேன்.

அடுத்து விஜய்சேதுபதி படத்தைத் தொடங்குவதாக திட்டம்.

சினிமா நிகழ்ச்சிகளில் இப்போதெல்லாம் உங்களை அதிகம் பார்க்க முடிவதில்லையே?

இன்னைக்கு இருக்குற சூழல்ல எல்லாவற்றையும் மாற்ற முடியுமான்னுதெரியல. எனக்குன்னு சில கருத்துகள் இருக்கு. அதுக்கு என்கிட்ட சினிமா என்ற கலைஇருக்கு. இனி அது வழியே என் கருத்துகளை மக்களிடம் கொண்டு போகலாம் என இருக்கிறேன். மாறக்கூடியவர்கள் அதைப் பார்த்து மாறட்டுமே.

இந்த இடைவெளிக் காலம் உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?

 சினிமாவை நேசிப்பவன் நான். கடந்த மூன்று ஆண்டுகளில் நிறையப் பிரச்சினைகளைச் சந்தித்தேன். சேரனுக்குப் பிரச்சினைன்னு உலகம் முழுக்க தெரிந்த நிலையிலும் வெள்ளைசேது என்ற மனிதரின் அன்பால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிரேம்நாத் நட்பு கிடைத்தது. நான் திரும்பவும் படம் இயக்க வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பமாக இருந்தது. இந்த நேரத்தில் இருவருக்கும் நன்றி.

ஒரு அறிமுக இயக்குநராக ‘பாரதி கண்ணம்மா’ படம் எடுத்தப்போ இருந்த சேரனைவிட இப்போ இன்னும் எனர்ஜியோட இருக்கேன்.

 சேரனின் ‘சினிமா டு ஹோம்’ (C2H) திட்டம் இனி?

 ஒரு தனி மனிதனாக அதை நான் மட்டுமே செய்ய முடியாது. எனக்கும் அந்த எண்ணம் இல்லை. யாராவது அதைத் தொடுவோம் என்று முன்வரும்போது அந்த சிஸ்டத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அப்போது இணைந்து பணியாற்றவும் செய்வேன்.

இவ்வாறு சேரன் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close