[X] Close

’இனி, பரியேறும் பெருமாள், கனா, 96 மாதிரி படங்கள்தான் ஓடும்!’ - இயக்குநர் சேரன் நம்பிக்கை


cheran

இயக்குநர் சேரன்

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 11:34 am
  • அ+ அ-

ம.மோகன்

இனி, பரியேறும் பெருமாள், கனா, 96 மாதிரியான படங்கள்தான் ஓடும் என்று இயக்குநர் சேரன் நம்பிக்கை மிளிரத் தெரிவித்தார். 

இயக்குநர் சேரனின் பிரத்தியேகப் பேட்டியில், அவர் கூறியதாவது:

இன்றைய ரசிகர்களிடம் கதைப் படங்களை ரசிக்கும் பொறுமை இருப்பதாக நினைக்கிறீர்களா?

நல்ல படங்களைப் பார்க்க ரசிகர்கள் எப்போதும் தயாராகவே இருக்காங்க. இடைப்பட்ட காலத்துல ஒரு அலை வந்தது. அதுல சினிமாவோட தன்மை மாறுச்சு. அந்த அலையால ரசிகர்கள் பின்தங்கிதான் நின்னாங்க.

இப்போ ‘பரியேறும் பெருமாள்’, ‘கனா’, ‘96’ போன்ற படங்களை நன்றாகக் கொண்டாடுறாங்க. இனி இந்த மாதிரி படங்கள்தான் ஓடும்.

‘பாரதி கண்ணம்மா’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘தேசியகீதம்’ மாதிரியான உங்களது படங்கள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்துகிறதே?

ஒரு திரைப்படம் காலம் கடந்து பேசப்படுகிறது என்பதைவிட அப்போது நிலவிய சமூகப் பிரச்சினைகள் இன்றைக்கும் தீர்ந்தபாடில்லை என்பதையே இது காட்டுகிறது. அந்த வகையில பார்க்கும்போது இன்னும் சமூகத்துல குறைபாடுகள் குறையவே இல்லை.

என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு இது வேதனையை அளிக்கக் கூடியது.

இவ்வாறு சேரன் தெரிவித்தார். 

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close