[X] Close

’என்ன கையைப்புடிச்சு இழுத்தியா?; வடிவேலுவை சாதாரண காமெடி நடிகன்னு நினைச்சிடாதீங்க; மகா கலைஞன்!’ – மனோபாலா ஓப்பன் டாக்


vadivelu-manobala

வடிவேலு - மனோபாலா

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Feb, 2019 18:50 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘வடிவேலுவை சாதாரண தமிழ்க் காமெடி நடிகன்னு மட்டும் நினைச்சிடாதீங்க. மகாகலைஞன் வடிவேலு’ என்று இயக்குநர் மனோபாலா தெரிவித்தார்.

நடிகரும் இயக்குநருமான மனோபாலா, தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

ஒரு லஞ்ச் பிரேக்கில், நானும் வடிவேலுவும் பேசிட்டிருக்கும் போது, பேச்சை முடிச்ச இடத்திலேருந்தே அவர் பேசினார். சுத்தி இருந்தவங்களுக்கு சிரிப்பு தாங்கமுடியலை.

அப்புறம், சங்கிலிமுருகன் பஞ்சாயத்து சீன் ஞாபகம் இருக்குதானே. ‘ஏற்கெனவே இந்த ஊருக்கும் அவங்க ஊருக்கும் வாய்க்காத் தகராறு இருக்கு’ன்னு சொல்லுவாரு சங்கிலிமுருகன். ‘என்ன வாய்க்காத் தகராறு’ம்பார் வடிவேலு.

‘என்னை கையைப் புடிச்சு இழுத்தியா?’ இப்படி சங்கிலி முருகன் கேக்கறதையே ஒரு கேள்வியாக்கி சொல்லிக்கிட்டே இருப்பார் வடிவேலு. ஒவ்வொரு முறையும் அவரோட எக்ஸ்பிரஷன் ஒவ்வொருவிதமா இருக்கும். சின்னச்சின்ன ரியாக்‌ஷன்ல புகுந்து விளையாடியிருப்பார் வடிவேலு.

ஒண்ணே ஒண்ணு சொல்றேன். வடிவேலுவை, சாதாரண தமிழ்க் காமெடியன்னு மட்டுமே நினைச்சிடாதீங்க. மகா கலைஞன் அவர். வடிவேலுவைத் தவிர வேற யாருமே இந்த அளவுக்கு எக்ஸ்பிரஷனும் ரியாக்‌ஷனும் காட்டி காமெடி பண்ணவே முடியாது’

இவ்வாறு மனோபாலா தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close