[X] Close

மகிழ்ச்சி என்றால் மஹிமா என்று அர்த்தம்


if-happiness-means-mahima-nambiyar

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 10:27 am
  • அ+ அ-

தமிழில்  விரைவில் வெளிவர உள்ள ‘ஐங்கரன்’ படத்தைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் ‘மகா முனி’ படத்தில் நாயகியாக நடிக்கத் தயாராகிறார் மஹிமா நம்பியார். இதற்கிடையே  மலையாளத்தில் ‘மதுர ராஜா’ படத்தில் மம்முட்டியுடன்  நடிக்கிறார்.

‘‘ஐங்கரன்’ படத்தில்  எனக்கு செவிலிப் பெண் பாத்திரம். செம எனர்ஜெடிக்கான படம். அதே போல  ‘மவுனகுரு’ இயக்குநர் சாந்தகுமார் இயக்கும் ‘மகா முனி’ படத்திலும்  அற்புதமான  பாத்திரம். நகரப் பின்னணியில் திரில்லர் களமாக விரியும் இந்தப் படமும் எனக்கு  நடிப்பில்  நல்ல  பெயர் வாங்கிக்கொடுக்கும் என்று நம்புகிறேன். மலையாளத்தில் மம்முட்டி சார் நடித்த ‘போக்கிரி ராஜா’ படத்தின் அடுத்த பாகமாக விரியும் ‘மதுர ராஜா’ படத்துக்கான இன்னும் ஒருநாள் படப்பிடிப்பும், டப்பிங் மட்டும்தான் இருக்கு. இந்தக் கதைக்கும் மதுரைக்கும் சம்பந்தம் இருப்பதால்தான் ’மதுர ராஜா’ என்று   பெயர் வெச்சிருக்காங்க. படத்தில் ஜெய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நான் நடித்திருக்கேன்’’ என்கிறார்  மகிழ்ச்சியுடன் மஹிமா.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close