[X] Close

பாடிக்கொண்டே திடீரென கூட்டத்தின் மீது குதித்த ரன்வீர்; காயமடைந்த ரசிகர்கள்: வைரலாகும் வீடியோ


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 06 Feb, 2019 17:05 pm
  • அ+ அ-

பாலிவுட் நடிகரான ரன்வீர் தன்னுடைய உற்சாகத் துள்ளலுக்கும் விளையாட்டுக்கும் பேர் போனவர். ஆனால் அவரின் விளையாட்டே தற்போது வினையாகியுள்ளது.

தன்னுடைய Gully Boy படத்தின் விளம்பரப் பணிகளை மேற்கொண்ட ரன்வீர், லேக்மீ ஃபேஷன் வீக்கின் இறுதிநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ரன்வீரைக் காண ரசிகர்கள் கூட்டம் திரண்டிருந்தது. தன்னுடைய படப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த அவர், எதிர்பாராதவிதமாகத் திடீரென  கூட்டத்தின் மீது குதித்தார்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பெண் ரசிகை ஒருவரும் ரசிகர்கள் சிலரும் காயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் வளர்ந்துவரும் நடிகரான ரன்வீர், தீபிகா படுகோனைக் காதல் திருமணம் செய்தார். ‘பத்மாவத்’, ‘ராம் லீலா’ மற்றும் ‘பாஜிராவ் மஸ்தானி’ போன்ற படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள், கடந்த ஆண்டு நவம்பரில் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

ரன்வீர் சிங் நடிப்பில், Gully Boy படம், பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close