[X] Close

40 வருஷமா நடிக்கும் ராதிகாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கலையே..!; சரத்குமார் வருத்தம்


sarathkumar-radhika

சரத்குமார் - ராதிகா

  • வி.ராம்ஜி
  • Posted: 06 Feb, 2019 12:19 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

கடந்த 40 வருடங்களாக, மிகச்சிறந்த வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கும் உன்னதமான நடிகை ராதிகார். அவருக்கு ஒரு பத்மஸ்ரீ விருது கொடுக்கவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது என்று நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் தனியார் சேனலுக்குப் பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

நடிகை ராதிகா, திரையுலகிறகு வந்து 40 வருடங்களாகிவிட்டன. கிழக்கே போகும் ரயில் படத்தில் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கி, இன்னமும் நடித்துக்கொண்டிருக்கிறார். எத்தனையோ நடிகைகள் தனது நடிப்பால் தனிமுத்திரை பதித்திருக்கிறார்கள். அந்த வகையில், நடிகை ராதிகாவின் தனித்துவமான நடிப்பை எல்லோரும் ஏற்றுக்கொண்டு, இன்னமும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமா?

திரையுலகில் நாயகிகளாக வலம் வந்த நடிகைகள், இன்றைக்கு தொலைக்காட்சி சீரியல்களிலும் நாயகிகளாகவே வலம் வந்து கொண்டிருப்பதற்கு ஆரம்பகர்த்தாவே ராதிகாதான். அதேபோல், சீரியல் ஹீரோயின் என்றாலே அழுதுகொண்டே இருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி, தன்னம்பிக்கையான, உறுதியான மனம் கொண்ட நாயகிகளாகக் காட்டிய பெருமைக்கு உரியவர் ராதிகா.

வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கடந்து வந்து ஜெயித்திருப்பவர் ராதிகா. பசும்பொன் படத்தில் ராதிகாவின் நடிப்பைப் பார்த்து பிரமித்த இயக்குநர் பாலா, படம் பார்த்துவிட்டு வந்த நள்ளிரவில், ராதிகாவுக்கு போன் செய்து, நடிப்பைப் பாராட்டினார். அந்த அளவுக்கு நடிப்பாற்றல் கொண்ட ராதிகாவுக்கு, இன்னமும் பத்மஸ்ரீ முதலான எந்த விருதுகளும் வழங்கப்படவில்லை என்பது வருத்தம்தான் எனக்கு.

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close