[X] Close

டெல்லி பிரசாத் - விஜய் சேதுபதி இணையும் துக்ளக்


vijay-sethupathi-announces-new-film

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 17:37 pm
  • அ+ அ-

புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள படத்துக்கு 'துக்ளக்' எனப் பெயரிட்டுள்ளனர்

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. நந்தகோபால் தயாரித்த அப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். மாபெரும் வெற்றியடைந்து திரையரங்கில் சுமார் 100 நாட்கள் கடந்துள்ளதால் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தது.

'96' படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டவர் லலித்குமார். அவருடைய தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்தினார் விஜய்சேதுபதி. இது தொடர்பாக '96' வெற்றி விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:

லலித்குமார் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளேன். டெல்லி பிரசாத் இயக்கவுள்ளார். படத்தின் பெயர் 'துக்ளக்'. பாலாஜி தரணீதரன் அணியினருக்கு ரொம்ப நெருங்கிய நண்பர். டெல்லி பிரசாத்தை நம்பி இருட்டில் கிணற்றில் கூட குதிக்கலாம். அவ்வளவு நம்பிக்கையான மனிதர். இவ்வாறு விஜய்சேதுபதி தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close