[X] Close

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தாயார் காலமானார்


spb-mother-death

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 10:56 am
  • அ+ அ-

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணி யனின் தாயார் சகுந்தலா காலமானார்.

பாடகர் எஸ்.பி.பி.யின் தாயார் சகுந்தலா (89). ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் காலமானார்.

இதுகுறித்து அவரது பேரன் எஸ்.பி.பி.சரண் கூறியதாவது:

சொந்த வீட்டில் வாழ்நாள் முழுக்க வசிக்க வேண்டும் என்பதுதான் பாட்டியின்விருப்பம். திரைப்பட பணிகள், இசை கச்சேரிகளுக்கு இடையே அப்பா மாதத்தில் ஓரிருமுறை,அங்கு சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவார். பாட்டியின் திடீர் மறைவு எங்களுக்கு பேரிழப்பு. லண்டனில் இருக்கும் அப்பாவுக்கு செய்தி அனுப்பியுள்ளோம். அப்பா செவ்வாய்க்கிழமை நெல்லூர் வருகிறார். அவர் வந்ததும் முறைப்படி பாட்டியின் இறுதிச்சடங்குகள் நடக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close