[X] Close

’ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினிதான்!’ – இளையராஜா புகழாரம்


ilayaraaja-75-rajini

இளையராஜா - ரஜினிகாந்த் (படம்:எல்.சீனிவாசன்)

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Feb, 2019 20:45 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

இளையராஜா 75 பாராட்டு விழாவில், ’ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினிதான்’ என்று இளையராஜா பேசினார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில், இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கமல், ரஜினி, ஷங்கர், பி,வாசு உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்களும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் ரஜினி கலந்துகொண்டு மேடையேறினார். அப்போது நடிகை சுஹாசினி,’இங்கே இந்த மேடையில், தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இசையுலகின் சூப்பர் ஸ்டாரும் இருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.

உடனே இளையராஜா சுஹாசினியைப் பார்த்து, ‘மேடையும் மைக்கும் கிடைச்சிருச்சுன்னா, எதை வேணா சொல்லிருவீங்களா? அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. இந்த உலகத்துல ஒரேயொரு சூப்பர்ஸ்டார்தான். அது ரஜினிதான். சூப்பர் ஸ்டார்னாலே அது ரஜினிதான்’ என்று இளையராஜா சொல்ல, மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்து கரவொலி எழுப்பி, ஆமோதித்தது.

இளையராஜாவுக்கு பாராட்டு விழா என்ற போதும், மேடையில் இளையராஜாவைப் பாராட்டும் விதமாக வந்த ரஜினியையே இளையராஜா பாராட்டித் தள்ளியது, வந்திருந்தவர்களை வியப்பிலும் மகிழ்விலும் ஆழ்த்தியது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close