[X] Close

‘‘மாதவிலக்கு புனிதமானது’’ - சபரிமலை விவகாரத்தில் விஜய்சேதுபதி கருத்தால் சர்ச்சை


vijay-sethupathi

  • kamadenu
  • Posted: 04 Feb, 2019 14:39 pm
  • அ+ அ-

சபரிமலை விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி கூறியுள்ள கருத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

சபரிமலையில் அனைத்துப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி, கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடந்தது.  கடந்த 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விவகாரம் கேரளாவில் தற்போது வரை கடும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் 'மாமனிதன்' திரைப்பட படபிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. அப்போது படப்பிடிப்புக்கு இடையே அளித்த பேட்டியில், சபரிமலை விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி தெரிவித்த கருத்துக்கள் மீண்டும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

சபரிமலை விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி கூறியிருப்பதாவது:

ஒரு ஆணாக வாழ்க்கை நடத்துவது மிகச் சுலபம். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கினால் பெண்கள் வலி அனுபவிக்க வேண்டும். மாதவிலக்கு தூய்மையானதல்ல என்று யார் சொன்னது? உண்மையில் அது மிகவும் புனிதமானது. சபரிமலை பிரச்சினையில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன்.

இவ்வாறு விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

இவரது கருத்துகளுக்கு சமூகவலைத்தளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடி வருபவர்கள் மத்தியில், பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close