[X] Close

என் ஒவ்வொரு பாட்டும் சிம்பொனிதான்! - இளையராஜா பிரத்யேக பேட்டி


ilayaraaja

இளையராஜா

  • kamadenu
  • Posted: 01 Feb, 2019 14:52 pm
  • அ+ அ-

ஜெயந்தன்

இளையராஜா எனும் கவிஞரை, பாடலாசிரியரை அறிவோம். ஆனால், இளையராஜா எனும் கதாசிரியர்நாடோடித் தென்றல்படத்துக்குப் பின் முகம் காட்டவே இல்லையே?

‘நாடோடித் தென்றல்’ என்னுடைய கதையே அல்ல. எனது பெயரைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டனர். நான் கூறிய கதையை அவர் எடுக்கவேயில்லை. அந்தக் கதை இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது. அதைப் படாமக்க விரும்பும் யாரும் என்னிடம் அதைக் கேட்க வரலாம். அதுவொரு கிளாசிக். அது மாதிரியான படங்களை எடுக்க இப்போது யாரும் வரமாட்டார்கள்.

உங்களது சில மேடைக் கச்சேரிகளில் கவனித்திருக்கிறேன். இசைக் கலைஞர்கள் வாசிப்பதில் சின்னத் தவறு வந்தாலும் அந்த இடத்திலிருந்து மீண்டும் வாசிக்க வைத்துவிடுவீர்கள். இது தரத்துக்கான பிடிவாதமா, ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கட்டும் என்பதற்காகவா?

நீங்கள் மார்கெட்டிங் செய்கிறீர்களா என்பதுபோல் கேட்கிறீர்கள். என்னைப் போன்ற ஒரு கலைஞனுடைய உண்மையான மனநிலையை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. முப்பது வருடங்களுக்கு முன் போட்ட பாடலை, தினசரி கேட்கும் பாடலை மறுபடியும் தவறாக வாசித்தால் அதை எப்படிச் சகித்துக்கொள்வது. இப்படித் தவறுகள் நடக்கும்போது என்னால் சகிக்க முடியவில்லை.

உங்களது இசைக்காக ஏங்கும் ரசிகர்களுக்கு நீங்கள் இசையமைத்த சிம்பொனியை எப்போது கொடுக்கப்போகிறீர்கள்?

எனது ஒவ்வொரு பாடலுமே சிம்பொனிதான். இதுவரை உலகம் முழுவதும் உள்ள கம்போஸர்கள் உருவாக்கிய சிம்பொனிகளைக் கேட்டுக் கேட்டு ரசித்து, சிம்பொனி என்றால் என்னவென்று புரிகிற ஒரு காலம் இங்கே வரும்போது அதை வெளியிடுவதுதான் சரியாக இருக்கும். அந்தக் காலமும் நேரமும் கூடி வரும்போது கண்டிப்பாக அது வெளியே வரும். அந்த சூழல் சீக்கிரமே உருவாக வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close