[X] Close

பாட்மிண்டன் குழுவில் விஜய் மகள் சாஷா


sasha-vijay-participate-in-school-badminton-team

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 01 Feb, 2019 13:50 pm
  • அ+ அ-

பள்ளியின் பாட்மிண்டன் குழுவில் விஜய் மகள் சாஷா விளையாடி வருகிறார்.

விஜய்யின் மகன் சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலில் அவரோடு நடனமாடி திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு திரையில் தலைகாட்டாமல், படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக ‘ஜங்ஷன்’ என்ற குறும்படத்தில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு, வீடியோ வர்ணனையாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் சஞ்சய். தனது முதல் பேட்டியாக ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ மற்றும் ‘நோட்டா’ படங்களின் இயக்குநர் ஆனந்த் ஷங்கரை எடுத்தார்.

இப்படி அண்ணன் மீடியாவில் அசத்திக் கொண்டிருக்க, தங்கை சாஷாவோ விளையாட்டில் கலக்குகிறார். தற்போது சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார் சாஷா. இந்தப் பள்ளியின் பாட்மிண்டன் குழுவினர் புகைப்படங்களை, தன்னுடைய அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பள்ளி.

அந்தக் குழுவில் சாஷா விஜய்யும் இடம்பெற்றுள்ளார். இந்தக் குழுவினர் சமீபத்தில் கலந்துகொண்ட 3 போட்டிகளில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close