[X] Close

பிப்ரவரி 17-ல் 'ராஜேஷ் - சிவகார்த்திகேயன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?


first-look-at-rajesh-sivakarthikeyan-on-february-17

  • kamadenu
  • Posted: 30 Jan, 2019 18:22 pm
  • அ+ அ-

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
'ரஜினிமுருகன்' படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து படமாக்கி வருகிறார்கள்.
நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்துக்கான தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஆனால், படக்குழுவினர் 'Mr.லோக்கல்' என்ற தலைப்பை பரீசிலனையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இப்படத்துக்கு இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவுள்ளது. அதையும் விரைவில் முடித்து, படத்தின் இறுதிகட்டப் பணிகளை முடித்து, கோடை விடுமுறைக்கு வெளியிட ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 
ராஜேஷ் படத்தின் பணிகளை முடித்துவிட்டதைத் தொடர்ந்து, மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close