[X] Close

'இந்தியன் 2' அப்டேட்: கமலுடன் ஆர்யா?


indian-2-update

  • kamadenu
  • Posted: 30 Jan, 2019 18:19 pm
  • அ+ அ-

'இந்தியன் 2' படத்தில் கமலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் 2-ம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கான், சிம்பு, சித்தார்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பல பெயர்கள் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை என செய்திகள் வெளியாகின. 
இது தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரித்த போது, "சிம்புவுக்கு பதிலாக சித்தார்த் நடிக்கவுள்ளார் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. மேலும், ஆர்யாவிடம் பேசியுள்ளோம். படப்பிடிப்புக்கான தேதிகளை முழுமையாக முடிவு செய்த பின் தான், யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை முறையாக அறிவிக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்கள்.
எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’க்கான வசனங்களை எழுதியுள்ளனர். 

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close