[X] Close

இளையராஜாதான் பேர் வைச்சார்; உருகுகிறார் தீபன் சக்கரவரத்தி


deepan-chakravarthi-ilayaraaja

இளையராஜா

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Jan, 2019 20:21 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

இசைஞானி இளையராஜா அண்ணன்தான் எனக்கு தீபன் சக்கரவர்த்தின்னு பேரு வைச்சார் என்று நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகக் குறிப்பிட்டுள்ளார் பாடகர் தீபன் சக்கரவர்த்தி.

பழம்பெரும் பாடகர் திருச்சி லோகநாதனின் மகன் தீபன் சக்கரவர்த்தி. இவரின் இயற்பெயர் ராஜரத்தினம் சக்கரவர்த்தி.

தனக்கு திரைப்பாடல் தந்த இளையராஜாவைப் பற்றி சொல்லி நெகிழ்கிறார் தீபன் சக்கரவர்த்தி.

‘இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள்தான், இளையராஜா அண்ணனிடம் என்னை அழைத்துச் செல்வதாகாச் சொன்னார். அதற்கு முதல் நாள், சென்னைப் பல்கலைக்கழகத்தில் கங்கைஅமரனின் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக சென்றேன்.

அப்போது திருச்சி லோகநாதனின் மகன் வந்திருக்கிறார் என்று கங்கை அமரனிடம் யாரோ சொல்ல, உடனே அவர், என்னை மேடைக்கு அழைத்து எல்லோருக்கும் முன்பு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது என்னை யாருக்கும் அவ்வளவாகத் தெரியாது.

அப்போது அந்த மேடையில், என்னைப் பாடச் சொன்னார் கங்கை அமரன். நான் இரண்டு பாடல்கள் பாடினேன்.

மறுநாள். ஜி.கே.வெங்கடேஷ் அவர்களுடன் ராஜா அண்ணனைப் பார்க்கச் சென்றேன். அவர் என்னை ராஜா சாரிடம் அறிமுகப்படுத்தினார். ‘இவன் நல்லாப்பாடுவான். கஜல் பாட்டெல்லாம் கூட பாடுவான். குரல் பிடிச்சிருந்தா, ஒரு வாய்ப்பு கொடு’ன்னு சொன்னார்.

‘கஜல் பாடுங்க கேப்போம்’னு ராஜா அண்ணன் சொன்னார். பாடிக்காட்டினேன். பாட்டை முடிக்கக்கூட இல்ல. ராஜா சார், ஒரு கேசட்டைக்கொடுத்தார். இதைக் கேட்டு நல்லா ரிகர்சல் பண்ணிட்டு வா. நாளைக்கி காலைல ரிக்கார்டிங்’னு சொன்னார். அப்படியே வானத்துல பறக்கிறேன் நான்.

மறுநாள். ஜானகியம்மா கூட பாடப் போறேன்னு தெரிஞ்சுது. இன்னும் சந்தோஷமாயிட்டேன்.

‘ஓ நெஞ்சமே இது உன் ராகமே.

ஓ நெஞ்சமே இது உன் ராகமே.

கோடை காற்றில் கூடும் கூட்டில்

கொண்டாடிடும் இன்பம் கண்டு

ஆடும் பாடும் ஓ நெஞ்சமே இது உன் ராகமே.’

இந்தப் பாட்டுதான் என்னோட முதல் சினிமாப்பாட்டு.

ராஜா அண்ணன் இசைல, கங்கை அமரன் எழுதின பாட்டு. ஒளிப்பதிவாளர் நிவாஸ் தயாரித்து இயக்கிய ’எனக்காக காத்திரு’ படம்தான் நான் பாடின முதல் பாட்டு.

அப்போ ரிக்கார்டிங் தியேட்டர்ல, தீபன் தீபன்னு யாரையோ கூப்பிடுறாரு ராஜா அண்ணன். யாரையோ கூப்புடுறாங்கன்னு நினைச்சிக்கிட்டு பேசாம இருந்தேன்.

‘ராஜரத்தினம். உன்னைத்தான் கூப்புடுறேன். இனிமே உம்பேரு தீபன் அப்படின்னு சொன்னார் ராஜா அண்ணன்.

எங்க அப்பா வைச்ச பேரு ராஜரத்தினம் சக்கரவர்த்தி. எனக்கு சினிமா உலகத்துல தகப்பனா இருந்து ராஜா அண்ணன் தீபன்னு பேரு வைச்சார். ரெண்டையும் சேர்த்து, தீபன் சக்கரவர்த்தின்னு ராஜா அண்ணன் வைச்ச பேருதான், என்னை இந்த உலகுக்குக் கொண்டு சேர்த்துச்சு.

ராஜா அண்ணனுக்கு நான் என் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கேன். இதெல்லாம் அப்பா, அம்மா செஞ்ச புண்ணியம். அவங்களோட ஆசீர்வாதம். 

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகக் குறிப்பிட்டுள்ளார் தீபன் சக்கரவர்த்தி.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close