[X] Close

சட்டமும் கைவிட்ருச்சு; டப்பிங் பேசவும் வாய்ப்பும் வரலை - சின்மயி குற்றச்சாட்டு


chinmayi

சின்மயி

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Jan, 2019 11:05 am
  • அ+ அ-

மீடூ விவகாரத்தில் சட்டமும் கைவிட்டுவிட்டது. டப்பிங் யூனியனில் இருந்து நீக்கியதால், எனக்கு வாய்ப்புகளும் வரவில்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கலாச்சார விழா நடைபெற்றது. இதில் ஏராளாமானோர் கலந்துகொண்டு, தமிழ் இசையைப் பாடினார்கள். பாடகி சின்மயி கலந்துகொண்டு பல பாடல்களைப் பாடினார்.

பிறகு, செய்தியாளர்களிடம் சின்மயி தெரிவித்ததாவது:

மீடு விவகாரத்தில் எத்தனையோ பெண்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். தைரியமாக வெளியே வந்து பெண்கள் புகார் கொடுப்பதே பெரியவிஷயம். ஆனால், மீடூ பிரச்சினை குறித்து விசாரிக்க இந்த அரசாங்கம், இதுவரை ஒரு குழுவைக் கூட நியமிக்கவில்லை.

மேலும் மீடூ விவகாரத்தில் தமிழக அரசு எவர் மீதும் நடவடிக்கை எடுக்கவுமில்லை. ஆக, சட்டமும் எங்களை கைவிட்டுவிட்டது.

டப்பிங் யூனியனில் இருந்து என்னை நீக்கிவிட்டதால், இப்போது எனக்கு வாய்ப்புகளும் வருவதில்லை. ‘என்னை ஏன் டப்பிங் யூனியனில் இருந்து விலக்கினார்கள்? இது தவறு’ என்று டப்பிங் யூனியன் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.

இவ்வாறு சின்மயி தெரிவித்தார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close