[X] Close

ஆறு சட்டை வாங்கித் தந்தார் பாக்யராஜ் சார்; ஆர்.பாண்டியராஜன் நெகிழ்ச்சி


bhagyaraaj-pandiarajan

  • வி.ராம்ஜி
  • Posted: 27 Jan, 2019 21:18 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போய் உடனே ஆறு சட்டை வாங்கிக் கொடுத்தார் குருநாதர் பாக்யராஜ் சார் என்று நடிகரும் இயக்குநருமான ஆர்.பாண்டியராஜன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இயக்குநரும் நடிகருமான ஆர்.பாண்டியராஜன், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அதில் பாண்டியராஜன் கூறியதாவது:

சின்ன வயசுலயே சினிமால சேரணும்னு ஆசை வந்துருச்சு. அப்படி இப்படின்னு பாக்யராஜ் சார்கிட்ட மெளனகீதங்கள் படத்துலேருந்து அஸிஸ்டெண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணினேன்.

முதல்ல, பாக்யராஜ் சார் என்னை சேத்துக்கலை. ஆனா, அவர்கிட்ட இருந்த உதவியாளர்கள் எல்லாம், ’நாளைக்கி மெளனகீதங்கள் ஷூட்டிங் அடையார்ல இருக்கு. வந்துரு. பாத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. ‘முதல்ல கிளாப் போர்ட்டு அடி, பாத்துக்கலாம்’னு சொன்னாங்க. அப்படி கிளாப் அடிச்சிட்டு ஓட்டிப்போய் மறைஞ்சிக்கிட்டேன்.

அது பாக்யராஜ் சார் நடிக்கவேண்டிய சீன். நடிச்சு முடிச்சதும், ‘யாருய்யா கிளாப் அடிச்சது. குரல் புதுசா இருக்கே’ன்னு கேட்டார் சார். நான் எதிர்ல வந்து நின்னேன். ‘உன்னை யாருய்யா இதைப் பண்ணச் சொன்னதுன்னு திட்டினார். ‘சார், எனக்கு அப்பா இல்ல. இறந்துட்டாரு. நீங்கதான் சார், என்னை கைத்துக்கிவிடணும்னு சொல்லிட்டு, அப்படியே கால்ல விழுந்துட்டேன். இதைப் பாத்துட்டு பாக்யராஜ் சார், ஒருமாதிரி ஃபீல் ஆகிட்டாரு. சேர்த்துக்கிட்டாரு.

அப்புறம் பல மாசம் கழிச்சு ஒருநாள், சீன் கண்டினியூட்டியை பாத்துட்டிருந்தாரு. போட்டோஸையெல்லாம் பாத்துக்கிட்டே இருந்தவரு, பக்கத்துல நின்ன என்னை அடிக்கடி பாத்தாரு. ‘யோவ் என்னய்யா இது. இந்த சீன் எடுக்கும் போது க்ளாப் அடிக்கறப்ப அந்தச் சட்டை போட்ருக்கே. அப்புறம் ரெண்டு மாசம் முன்னாடியும் அதேசட்டை போட்ருக்கே. இதோ… இப்பவும் இந்தச் சட்டையைத்தான் போட்டுக்கிட்டிருக்கே. உங்கிட்ட எத்தனை சட்டை இருக்கு’ன்னு கேட்டார் சார். மூணு சட்டை சார்னு சொன்னேன்.

அன்னிக்கி வேலை முடிஞ்ச கையோட என்னை கடைக்குக் கூட்டிட்டுப் போய், ஆறு சட்டை வாங்கிக் கொடுத்தார் பாக்யராஜ் சார்.

படத்துல வர்ற சீன்ஸ்தான் பாக்கணும். ஆனா, பாக்யராஜ் சார், கிளாப் அடிக்கற என்னையும் என் சட்டையையும் கவனிச்சிருக்கார் பாருங்க. அதான் அவரோட மனசு. அதான் பாக்யராஜ் சார்.

இவ்வாறு பாண்டியராஜன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close