[X] Close

கமலுக்கு நான்தான் கோச்சர்; ‘பேட்ட’ நவாஸுதீன் சித்திக்


kamal-navasudeen-siddik

நவாஸுதீன் சித்திக்

  • வி.ராம்ஜி
  • Posted: 27 Jan, 2019 19:03 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

கமலுக்கு கோச்சரா இருந்திருக்கேன், தெரியுமா? என்று பேட்ட படத்தின் வில்லன் நடிகர் நவாஸுதீன் சித்திக் தெரிவித்தார்.

பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாஸுதீன் சித்திக். சமீபத்தில் தாக்ரே எனும் இந்திப் படத்தில், பால்தாக்கரேவாக நடித்து அசத்தியுள்ளார்.

தனியார் இணையதள சேனலில், நவாஸுதீன் சித்திக் பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

நேர்மையாக நடிக்கவேண்டும். உண்மையாக நடிக்கவேண்டும். எவரையும் காப்பி அடித்து நடிக்கக் கூடாது. அதில் எனக்கு உடன்பாடில்லை. இப்போது தாக்ரே படத்தில் நடித்திருந்தேன். இதற்காக நிறையவே ஹோம் ஒர்க் செய்தேன். பால்தாக்கரே எப்படி நடப்பார், பார்ப்பார், எப்படிப் பேசுவார் என்பதையெல்லாம் உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.

உடன் நடித்த நடிகர்களில், தமிழில் விஜய் சேதுபதியையும் ரஜினியையும் ரொம்பவே பிடித்தது. ரஜினிகாந்த், எவ்வளவு பெரிய சூப்பர்ஸ்டார். ஆனால் இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதைச் செய்ய ஆசைப்படுகிறார். அதையே செய்கிறார். இது பெரியவிஷயம்.

கமல் நடிப்பு, ரஜினி நடிப்பு என்று கம்பேர் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதேசமயம் கமல் மிகச்சிறந்த நடிகர். கமலின் ஹேராம் படத்தில், ஒரு காட்சியில் நடித்திருந்தேன். ஆனால் அந்தக் காட்சி, படத்தில் இடம்பெறவில்லை.

ஆளவந்தான் இந்தியில் டப் செய்யப்பட்டது. அந்தப் படத்தில், கமல் சாருக்கு, இந்தி கோச்சராக அவருடன் பணிபுரிந்தேன். கமல் சாருடன் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு நவாஸுதீன் சித்திக் தெரிவித்தார்.  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close