[X] Close

’பாசமலர்’ மாதிரி விஸ்வாசம்; ராதாரவி பேச்சு


viswasam-radharavi

நடிகர் ராதாரவி

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Jan, 2019 20:21 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

பாசமலர் படத்துக்குப் பிறகு அப்படியொரு பாசத்தை உணர்த்தும் படமாக விஸ்வாசம் இருக்கிறது என்று நடிகர் ராதாரவி பேசினார்.

கபடிவீரன் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி பேசியதாவது:

இந்தப் படம் சரியான தருணத்தில் வந்திருக்கிறது. கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிற காலகட்டம், கொஞ்சம்கொஞ்சமாக கபடியின் மீதும் ஆர்வம் செலுத்திவருகிறது. இன்றைக்கு அமிதாப் மகனெல்லாம் கபடி ஆட்டத்தைப் பார்க்கிறார்.

இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ள அரசு, மிகச் சிறப்பான முறையில் படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகை காயத்ரி, நன்றாக தமிழ் பேசினார். ஆச்சரியமாக இருந்தது. ஒரு தமிழ் நடிகை தமிழ் பேசுகிறார் என்றால் அது ஆச்சரியம்தான். இப்படி தமிழ் பேசினால், அடுத்தடுத்து இந்த சினிமா உலகம் வாய்ப்பு தருமா என்பது சந்தேகம்தான்.

நாங்கள் வில்லக்குடும்பம். தமிழ் சினிமாவிலேயே பிரமாதமாக நடித்து வரும் வில்லன்கள் எங்கள் குடும்பத்தில்தான் இருந்தார்கள். இருக்கிறார்கள். இயேசுநாதர் வேஷம் போட்டால், ஒருவரும் என்னை நம்பமாட்டார்கள். என்னடா இந்த ஆளு என்று சொல்லுவார்கள். அதேசமயம், ‘இப்போ பாரேன். தாடியெல்லாம் எடுத்துட்டு, யாரையாவது கொல்லப்போறார் பாரேன்’னு ஆடியன்ஸே சொல்லுவாங்க.

96 படத்துக்கு தியேட்டரில் கூட்டம் இருந்தது. ராட்சசன் படம் நல்ல கூட்டம் வழிந்தது. பேட்ட படத்துக்குச் சென்று பார்த்தேன். கூட்டம் நிறைந்திருந்தது. அதேபோல் விஸ்வாசம் படமும் நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

பாசமலர் படத்துக்குப் பிறகு விஸ்வாசம் படம் அந்த மாதிரி நல்ல படமாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். இன்னமும் பார்க்கவில்லை. பார்க்கவேண்டும்.பேட்ட படமும் விஸ்வாசம் படமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் பல நூறுக்கும் மேற்பட்டவர்களும் அவர்களின் குடும்பங்களும் வாழ்ந்துகொண்டிருக்கும். இதேபோல் நிறைய படங்கள், சின்னப் படங்கள் எல்லாமே ஓடவேண்டும்.

இவ்வாறு ராதாரவி பேசினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close