[X] Close

எல்லா படங்களுக்கும் இளையராஜாதான் இசை! – ’மெஹந்தி சர்க்கஸ்’ விழாவில், பாக்யராஜ் பேச்சு


ilayaraaja-bhagyaraj

இயக்குநர் கே.பாக்யராஜ்

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Jan, 2019 19:15 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

எல்லா படங்களுக்கும் இளையராஜாதான் இசை என்று இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மெஹந்தி சர்க்கஸ் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மெஹந்தி சர்க்கஸ். இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் ராஜூமுருகன் எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் பேசியதாவது:

இந்தப் படத்தின் இயக்குநர் சரவண ராஜேந்திரனை எனக்கு அவ்வளவாகத் தெரியாது.ஆனால் இங்கு வந்த போது அவரை முழுமையாகத் தெரிந்துகொண்டேன். இன்னொரு விஷயம்… மேற்குதொடர்ச்சி மலை இயக்குநர், பரியேறும் பெருமாள் இயக்குநர் என அவர்களிடமெல்லாம் பழகிக்கொண்டிருக்கிறார் என்பதில் இருந்தே இவரையும் தெரிகிறது.

தவிர, குக்கூ, ஜோக்கர் படங்களின் இயக்குநர் ராஜூமுருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள படம் என்பதால், இந்தப் படம் மெல்லிய உணர்வுகளை ரசனையுடன் சொல்லும் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

இயக்குநர் ராஜூமுருகனின் அண்ணன்தான் இந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இயக்குநர். குக்கூ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பல இடங்களில் பயன்படுத்திக் கொண்டே இருப்பார். அது மியூஸிக்கல் சப்ஜெக்ட். இந்த மெஹந்தி சர்க்கஸ் படத்திலும் இசை பிரதானமாக இருக்கும் என நினைக்கிறேன். அதேபோல் இளையராஜா பாடல்களும் ஆங்காங்கே இடம்பெறும் என்று தெரிகிறது.

இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். என்றாலும் கூட, இப்போது வருகிற எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை. அவரின் பாடல்கள் படத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

யார் படமெடுத்தாலும் யார் இசையமைத்தாலும் எல்லாப் படங்களுக்கும் இளையராஜா சாரின் இசையே பிரதானமாக இருக்கிறது. இளையராஜா 75 என்று விழா எடுப்பது ரொம்பவே பொருத்தமானது. இன்னும் பல விழாக்கள் இளையராஜாவுக்கு எடுக்கவேண்டும்.

இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close