[X] Close

ஈடு இணையில்லா கிறிஸ்துமஸ் விருந்து! - மட்டன் தலைக்கறி


mutton-thalacurry

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 18:34 pm
  • அ+ அ-

என்னென்ன தேவை?

தலைக்கறி – அரை கிலோ

மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

சீரகத் தூள் - 3 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பில்லை – சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

பட்டை - 2

லவங்கம் - 4

நட்சத்திர சோம்பு - 1

எப்படிச் செய்வது?

கறியை நன்றாகச் சுத்தம்செய்து கொள்ளுங்கள். கறியுடன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், சீரகத் தூள் 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெரிய வெங்காயம் மீடியமாக வெட்டியது,  தக்காளி ஒன்று (சிறு துண்டுகளாக நறுக்கியது), இஞ்சி - பூண்டு விழுது 2 டீஸ்பூன் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் போட்டு நான்கு விசில் விட்டு இறக்குங்கள்.

ஒரு வாணலியில் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, பட்டை, லவங்கம், ஸ்டார் சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். பிறகு குக்கரில் இருக்கும் கலவையை அதில் கொட்டி மூடி போட்டு தண்ணீர் சுண்டி வரும்வரை கிளறி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்குங்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close