[X] Close

ஈடு இணையில்லா கிறிஸ்துமஸ் விருந்து! - கடம்பா மீன் தொக்கு


kadamba-thokku

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 18:31 pm
  • அ+ அ-

கடம்பா மீன் தொக்கு

என்னென்ன தேவை?

கடம்பா மீன் - 1 கிலோ

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

தனியாத் தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

 வெங்காயம் - 1 கப்

தக்காளி - 2

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, சீரகம், சோம்பு, பட்டை, கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, சோம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளியுங்கள். பிறகு வெங்காயம் சேர்த்து  பொன்னிறமாக வதக்கி, சுத்தம்செய்த கடம்பா மீனைக் கொட்டி வதக்குங்கள். சிறிது நேரம் மூடி போட்டு வேகவிட்டுத் தக்காளியைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வையுங்கள். அனைத்தும் நன்றாகச் சேர்ந்து தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்குங்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close