[X] Close

ஈடு இணையில்லா கிறிஸ்துமஸ் விருந்து! - நண்டு குருமா


nandu-gravy

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 18:30 pm
  • அ+ அ-

வீட்டு வாசல்களில் ஒளிரத் தொடங்கும் நட்சத்திரங்களும் பரிசுகள் கட்டப்பட்ட மரமும் கிறிஸ்துமஸ் வருவதை உணர்த்திவிடும். கேக், பிரியாணி இவை இரண்டுக்கும் கிறிஸ்துமஸ் விருந்தில் சிறப்பு இடம் உண்டு. “நாம் அடிக்கடி சமைக்காத அசைவ உணவு வகைகள் சிலவற்றை கிறிஸ்துமஸ் அன்று செய்து ருசிக்கலாம். எளிதாகச் செய்யக்கூடிய இனிப்பு வகைகளுக்கும் அன்று இடம் தரலாம்” என்று சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்வர்ணா சுரேஷ். தினசரிச் சமையலையே விருந்தாக மாற்றும் வித்தை தெரிந்தவர் இவர். கிறிஸ்துமஸ் சிறப்பு உணவு வகைகள் சிலவற்றைச் செய்ய நமக்குக் கற்றுத்தருகிறார்.

 நண்டு குருமா

என்னென்ன தேவை?

நண்டு - அரை கிலோ

வெங்காயம் - 6

தக்காளி - 4

பச்சை மிளகாய் - 4

தேங்காய் - அரை முடி

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

கடுகு, பட்டை, சோம்பு, கசகசா,

மிளகு தூள் சிறிதளவு

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவிட்டு அரைத்துக்கொள்ளுங்கள். தேங்காய், சோம்பு, கசகசா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், கடுகு சேர்த்துத் தாளியுங்கள். பிறகு அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நண்டை அதில் கொட்டிக் கிளறுங்கள். ஐந்து நிமிடம் கழித்து அரைத்துவைத்த வெங்காய விழுதைச் சேர்த்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர்  ஊற்றி மூடுங்கள். பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்ததும் தேங்காய் விழுதை ஊற்றி ஐந்து நிமிடத்தில் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்குங்கள்.

பிறகு சிறிதளவு எண்ணெய்யில் கடுகு, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றைச் சேர்த்துத்  தாளித்து, அரைத்துவைத்த தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு, கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close