[X] Close

ஒடிசா முதலீட்டாளர்கள் மாநாடு: ஆதித்யா பிர்லா குழுமம் ரூ. 14,500 கோடி முதலீடு


aditya-birla-group-invests

ஒடிசாவில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா.

  • kamadenu
  • Posted: 13 Nov, 2018 09:48 am
  • அ+ அ-

ஒடிசாவில் நடந்துவரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. ஆதித்யா பிர்லா குழுமம் ரூ. 14,500 கோடி முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ. 3,000 கோடி முதலீடு செய்கிறது. ஒடிசாவை முன்னணி தொழில்துறை மாநிலமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் முதல்வர் நவீன் பட்நாயக். இதற்காக ஒடிசா அரசு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரமாண்ட மேக்இன் ஒடிசா மாநாட்டை புவனேஸ்வரில் நடத்தி வருகிறது.நவம்பர் 11-15 வரை 5 நாள்கள் இந்த மாநாடு நடக்கிறது. நேற்று இந்தமாநாட்டில் முகேஷ் அம்பானி, குமார் மங்களம் பிர்லா உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்களம் பிர்லா ஒடிசாவின் வரலாறு, மக்கள், அங்குள்ள கலை மற்றும் தொழில்துறையின் பயணம் ஆகியவற்றைப் பற்றி பேசினார். பின்னர் ஒடிசாவில் ரூ. 14,500 கோடி முதலீடு செய்வதாகக் கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “நான் இங்கு முதலீட்டாளராக மட்டும் வரவில்லை. ஒடிசாவின் முயற்சிகளைப் பார்த்து பிரமிக்கும் பார்வையாளராகவும் வந்திருக்கிறேன். ஏனெனில் இந்திய மாநிலங்களில் ஒடிசா முதலீடு செய்வதற்கான முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இங்கு முதலீடு செய்வதன் மூலம் அதிக வளர்ச்சியை எட்ட முடியும் என்ற கனவு உள்ளது. அடுத்த இரண்டு வருடங்களில் ரூ. 14,500 கோடி அளவிலான முதலீடுகளை ஒடிசாவில் ஆதித்யா பிர்லா குழுமம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். தொழில் வளர்ச்சியைத் தாண்டி மிக அடித்தட்டு மக்களிடமும் சென்று சேர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஒடிசாவில் 5 லட்சம் மக்களை சென்றடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆதித்யா பிர்லா ஒடிசாவில் செய்யும் முதலீடானது நீண்டகாலத்துக்கான வலுவான உறவை உருவாக்கும் என்று நம்புகிறேன்” என்று பேசினார். இதற்கான வளங்கள், கல்வி, திறன்வாய்ந்த பணியாளர்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் ஒடிசா அரசு கவனம் செலுத்தி வருகிறது. எனவேதான் இந்தியாவின் முதலீட்டு மையமாக ஒடிசா மாறிவருகிறது என்று கூறினார். மாநாட்டில் பேசிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கனிம வளங்கள் உற்பத்தியிலும் தயாரிப்பிலும் முன்னணி மாநிலமாக ஒடிசா திகழ்கிறது என்றார்.

மேலும் அலுமினியம், இரும்புஉள்ளிட்ட துறைகளிலும் அபரிமிதமான தொழில் வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே முதலீட்டாளர்கள் ஒடிசாவில் நீண்டகால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையிலான திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தொழில்நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒடிசா அரசு செய்துகொடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close