[X] Close

5 நிமிடத்தில் 22 ஆயிரம் கோடிக்கு விற்பனை: ஆன்லைனில் அலிபாபா அசத்தல் சாதனை


22000-crores-sales-in-5-mins

  • kamadenu
  • Posted: 11 Nov, 2018 15:36 pm
  • அ+ அ-

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா அதிரடி தள்ளுபடியுடன் 5 நிமிடத்தில் 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்து சாதனை நிகழ்த்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் உலக அளவில் கொடிகட்டி பறக்கிறது. அமேசான் உட்பட அமெரிக்க நாடுகளின் வர்த்தக நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. குளோபால் ஷாப்பிங் திருவிழா என்ற பெயரில் அதிரடி தள்ளுபடி விற்பனையை அலிபாபா அறிவித்தது.

நவம்பர் மாதம் 11-ம் தேதியை முன்னிறுத்தி ஞாயிற்றுக்கிழமையான இன்று 11:11 என்ற பெயரில் இந்த விற்பனை நடத்தப்பட்டது. பல்வேறு நிறுவனங்களின் மொபைல் போன்கள் உட்பட ஏராளமான எலெட்ரானிக்ஸ் பொருட்கள் அதிகஅளவில் இந்த விற்பனையில் இடம் பிடித்தன. டோக்கியோ முதல் பிராங்பர்ட் நகரம் வரை இந்த விற்பனைக்காக வாடிக்கையாளர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

அலிபாபா நிறுவனர் ஜாக்மா நேரடியாக இந்த விற்பனையை கண்காணித்தார். விற்பனை தொடங்கிய 5 நிமிடங்களுக்குள் மொத்தம் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் விற்பனையாகின. ஒரு மணிநேரத்தில் 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்பனையாகின.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இந்த விற்பனை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இதேபோன்ற விற்பனையை நடத்திய அலிபாபா ஒரு நாளில் 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close